ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

Date:

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள் மீது ஜயங்கேணி  வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள்; உட்பட 4 பேர் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் ஏனைவர்கள் தப்பி ஓட்டம்

குறித்த ஆலையத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான இன்று பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கி கொண்டிருந்தபோது அதனை வாங்கி சாப்பாடு இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து 7 பேர் கொண்ட ஜயங்கேணி வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கயவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவரை மடக்கிபிடித்ததுடன் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் மடக்கி பிடித்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரை பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில்  இருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்