திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

Date:

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான் பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை(27) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் சம்பவ தினமான நேற்று காலையில் அம்பாறைக்கு செல்வதற்காக சென்றுள்ள நிலையில் சாரதி வீதியை மாறி பொத்துவில் நோக்கி பிரயாணித்த போது விநாயகபுரம் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதி பாதுகாப்புக்கு அமைத்த தூணில் மோதி விபத்துக்குள்ளானதில்  பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி மற்றும் இரு சிறுவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீகன் நினைவலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்