ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் -ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்

Date:

ஆறு கட்சிகள் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும் எனவே தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி  செல்லவும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் ஒன்றை புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இவர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் இருப்புக்கு கேள்விக்குறியாகி இந்த நிலையில் மீண்டும் இவ்வாறான தமிழ்   கட்சிகள் ஒன்றினைவு வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும்

எனவே தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்வது காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் இந்த சம்பவம் தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தின் போது  தமிழரசு கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மறைந்த சம்பந்தன் இலங்கை தேசிய கொடியை அசைத்து  தமிழர்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக சர்வதேசத்துக்கு நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என அன்று கொண்டாடினார் அதற்கு அவருக்கு சொகுசு வீடு வழங்கப்பட்டிருந்தது

அதன் பின்னர் இன்று அந்த கட்சியினர் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என இலங்கை சுதந்திர தினத்தில் இலங்கைக்கு சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள் என்று இன்று கூறுகின்றனா. இவ்வாறு  இவர்கள் காலத்திற்கு காலம் நேரத்துக்கு நேரம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்;.

இவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவை தேடி தர வேண்டும் என்ற நோக்கம் இல்லை தங்களுடைய அரசியல் இருப்புக்காகவும்; தேவைகளுக்காகவும் கால காலமாக அரசியல் ஆசன இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும்; அரசியல் செய்ய முடியாத கால கட்டங்களில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கு

தமிழ் மக்களை வேறு திசைக்கு திருப்பி தேர்தல் வரும்போது கூட்டுச் சேருவதும் கூட்டினைவதும் தேர்தல் முடிந்த பின்னர் ஆளுக்கு ஆள் பிரிந்து சென்று விடுவார்கள் அதன் பின்னர் தமிழ் மக்களின் இருப்பு தான் கிழக்கு மாகாணத்தில் கேள்விக்கறியாக்கப்படுகின்றது

எனவே இந்த ஆறு கட்சிகளுடைய கூட்டுச் சேர்வினை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரைவில் உங்களுக்கான பதிலை தருவார்கள் .
இந்த கூட்டுச் சேர்வு வடக்கு மாகாணத்தை படிக்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களுடைய இருப்பினை நிச்சயமாக இது பாதிக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

உங்களால் அரசியல் செய்ய முடியாவிட்டால் நீங்கள் தயவு செய்து உங்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள் நாட்டிலே படித்த வேலையற்ற பட்டதாரிகள் புத்திஜீவிகள் இருக்கின்றனர் அவர்களிடம் தமிழரசு கட்சியை கொடுங்கள் அவர்கள் அதை வழிநடத்திச் செல்வார்கள் காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்தி விடவும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...

யாழ் மாநகர சபை முன் மக்கள் போராட்டம்

யாழ். காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு நிரந்தரத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்