பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, தமக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை, இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைக்காக அழைக்கப்பட்ட குறித்த நகர சபை உறுப்பினரை, ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...

போலிப்படத்தை பரப்பாதீர்கள்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), தங்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள்...

நவாலி தேவாலய படுகொலை நினைவு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்