72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கே.பாக்யராஜ் உடல் தகனம்

Date:

இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்யராஜ் உடல் 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை​யுடன் சென்​னை​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது. பிரபல இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ் கடந்த 27ஆம் திகதி காலை நடைப​யிற்சி சென்​று​விட்டு வீட்​டுக்கு வந்​த​போது மாரடைப்பு ஏற்​பட்டு கால​மா​னார். அவருக்கு வயது 73.

அவரது மறைவு அதிர்ச்​சி​யை​யும், சோகத்​தை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள வீட்​டில் அவரது உடலுக்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், முதல்​வர் விஜய், சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், விசிக தலை​வர் திரு​மாவளவன், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், மநீம தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்ட அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் அஞ்​சலி செலுத்​தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறினர்.

இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்​.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​க​னி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன், சந்​தான​பார​தி, லிங்​கு​சாமி, நடிகர்​கள் ரஜினி​காந்த், மம்​மூட்​டி, பார்த்​திபன், சரத்​கு​மார், தனுஷ், சிவ​கார்த்​தி​கேயன், சூரி, ஜெய​ராம், விக்​ரம்​பிரபு, மலை​யாள நடிகரும் எம்​.பி.​யு​மான சுரேஷ் கோபி, திலீப், நடிகைகள் ராதி​கா, சுஹாசினி, ரேவ​தி, அம்​பி​கா, ராதா, நயன்​தா​ரா, த்ரிஷா, சினேகா உட்பட திரை​யுல​கினர் ஏராள​மானோரும், பொதுமக்களும் அஞ்​சலி செலுத்​தினர்.

பொது​மக்​கள் அஞ்​சலிக்​குப் பிறகு, பாக்​ய​ராஜ் உடல் நேற்று காலை நுங்​கம்​பாக்​கம் லேக் ஏரி​யா​வில் உள்ள அவரது வீட்​டில் இருந்​து, கதீட்​ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காம​ராஜர் சாலை, சாந்​தோம் வழி​யாக பெசன்ட் நகர் மின் மயானத்​துக்கு ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​பட்​டது.

இறுதி ஊர்வல வாக​னத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த பதாகை​யில் ‘அன்​புடன் உங்​கள் கே.​பாக்​ய​ராஜ்’ என்ற வாசகத்​துடன் அவரது கையெழுத்​தும் இடம்​பெற்​றிருந்​தது. அந்த வாக​னத்​தில் பாக்​ய​ராஜ் உடல் அருகே அவரது மனைவி பூர்​ணி​மா, மகள் சரண்​யா, மகன் சாந்​தனு, மரு​மகள் கீர்த்தி ஆகியோர் கண்​ணீர் மல்க அமர்ந் ​திருந்​தனர்.

வழிநெடு​கிலும் ஏராள​மான ரசிகர்​கள், பொது​மக்​கள் சாலை​யின் இரு​புற​மும் திரண்டு நின்று மலர் தூவி இறுதி மரி​யாதை செலுத்​தினர்.

திரைத்​துறை​யில் பாக்​ய​ராஜின் பங்​களிப்​பைப் போற்​றும் வகை​யில் அவருக்கு அரசு மரி​யாதை வழங்​கப்​படும் என்று தமிழக அரசு ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தது. அதன்​படி, இறுதி ஊர்​வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை வந்​தடைந்​ததும், பாக்​ய​ராஜ் உடலுக்கு அரசு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.

அமைச்​சர்​கள் ஆனந்த், ராஜ் மோகன் ஆகியோர் மலர் வளை​யம் வைத்து பாக்​ய​ராஜ் உடலுக்கு இறுதி அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர், காவலர்​கள் 72 குண்​டு​கள் முழங்க, அரசு மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. பின்​னர், மகன் சாந்​தனு கண்​ணீருடன் இறு​திச்​சடங்​கு​களை செய்​த பிறகு, உடல்​ தகனம்​ செய்​யப்​பட்​டது.

spot_imgspot_img

More like this
Related

கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்

தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக வைகோ அறி​வித்த அடுத்த 24...

போசன் தான்சாலைகள் 18,000-ஐ தாண்டின; சுகாதார பரிசோதனையில் தீவிரம் காட்டும் PHI அதிகாரிகள்

போசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தான்சாலைகள் இதுவரை...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(28) சிறப்பாக இடம்பெற்றது. வசந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்