போதைப்பொருள் பாவனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் அரசு அனுமதி மறுப்பு

Date:

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இந்த பழைய வீடியோ தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனிடையே, அவரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது பேசுபொருளாகி உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, ஆர்ப்பாட்டம் குறித்து திமுக மாணவர் அணி வெளியிட்​ட அறிக்கையில், ‘ஆளும் தவெக அரசின் மனிதவள மேலாண்​மைத் துறை அமைச்​சர் சரத்​கு​மார், போதைப் பொருள் ஒழிப்பு நாளன்​று, சர்ச்​சைக்​குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது ​வெளி​யில் போதைப் பொருட்​களைப் பயன்​படுத்​து​வது​ போல வீடியோ எடுத்​து, அதை ‘தக் லைஃப் மொமென்ட்’ என்று ரீல்ஸ் வைரல் ஆனது.

இந்த செயல் இளைஞர்​களை தவறான பாதைக்கு ஊக்​குவிக்​கும் விதமாக அமைந்​துள்​ளது. இத்​தகைய போக்​கைக் கொண்ட ஒருவர் அமைச்​சர​வை​யில் தொடர்வது தமிழக இளைஞர்​களுக்கு நன்மை தராது. எனவே, அமைச்​சர் சரத்​கு​மாரை உடனடி​யாக பதவி நீக்​கம் செய்ய வலி​யுறுத்​தி, திமுக மாணவர் அணி சார்​பில் அனைத்து மாவட்​டத் தலை நகரங்​களி​லும் இன்று (29-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்​டம் நடை​பெறுகிறது. மாணவர் அணி நிர்வாகிகள், மாணவர்​கள் இதில் பெருந்​திரளாக கலந்​து​கொள்ள வேண்​டும்’ என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

வீடியோவில் இருந்தது என்ன?

தமிழக மனிதவள மேலாண்​மைத் துறை அமைச்​சர் சரத்​கு​மார், 2 ஆண்​டு​களுக்கு முன்பு ‘தக் லைஃப் மொமன்ட்’ என்ற பெயரில் இன்ஸ்​டாகி​ராமில் ஒரு பதிவை வெளி​யிட்​டிருந்​தார்.

சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் ஐபிஎல் போட்​டியைக் காணச் சென்​ற​போது ஸ்மார்ட்போன் மீது பவுடர் போன்ற பொருளை வைத்து ஏடிஎம் கார்டு மூலம் பொடிப்​பது போன்ற காட்சி அதில் இருந்தது.

கடந்த 26-ம் தேதி சர்​வ​தேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்​தில் இந்த வீடியோ காட்சி மீண்​டும் வைரலானது. அமைச்​சர் சரத்​கு​மார், போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தாக சர்ச்சை எழுந்​தது.

இதையடுத்​து, அமைச்​சர் சரத்​கு​மார் தனது மனை​வி​யுடன் இணைந்து ஒரு வீடியோ வெளி​யிட்​டார். 2 ஆண்​டு​களுக்கு முன்பு தனது ஒன்​றரை வயது குழந்தை உடல்​நலம் சரி​யில்​லாமல் இருந்தது. முழு மாத்​திரையை விழுங்க முடி​யாத​தால் அதை பவுடராக்கி கொடுத்​தேன் என்று அவர் விளக்​கம் அளித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. எனினும், அந்த வயது குழந்தைக்கு எந்த மருத்துவரும் மாத்திரை பரிந்துரைப்பதில்லையென்பதை சுட்டிக்காட்டி, அமைச்சர் பொய் சொல்கிறார் என்பதை பலரும் சுட்டிக்காட்டினர்.

திமுகவினர் கைது

அமைச்சர் போதைப்பொருள் பாவித்தது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், திமுகவினர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தனர். எனினும், ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி திரண்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை – எழும்பூரில் ஆர்ப்பாட்டத்துக்கு மேடை அமைத்த திமுகவினரை தடுத்து போலீஸார், அவர்களை கைது செய்தனர். தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணியின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கண்டனம்

‘பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அப்பட்டமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அறவழியில் அமைதியான முறையில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுத்து, அவர்களைக் கைது செய்திருக்கும் தவெக அரசின் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உங்களின் ‘தக் லைஃப்’ அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் இந்த அளவுக்குக் கை நடுங்கி, தொடை நடுங்கிப் போய் போலீஸுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்?

ஜனநாயக ரீதியான ஒரு அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு கோழை அரசாங்கம் தமிழகத்தை ஆள்வது வெட்கக்கேடு. அதிகார வெறி கொண்டு நீங்கள் போடும் இந்த சர்வாதிகார ஆட்டத்திற்குத் தமிழக இளைஞர்களும், மக்களும் வீதியில் இறங்கி மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’ என்று சமூக வலைதள பதிவு மூலம் திமுக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்