மட்டக்களப்பு தமிழ் தேசிய போரட்டத்துக்காக பல இயக்கங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தியாகம் செய்து சரிதிரம் படைத்த மாவட்டம் இவ்வாறு உயிர்தியாகம் செய்து போராடிய சமூகம் இன்று தேசிய கட்சிகளின் அடிவருடிகளாக செற்படுகின்றனர். ஊழலை ஒழிக்க வேண்டும் என சொல்லிக் கொண்டு வந்தவர்கள் 240 ரூபா ஒரு கிலோ அரிசியை 500 ரூபாவுக்கு மாறும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.
யூன் 19 தியாகிகள் தின நினைவேந்தலையிட்டு மட்டக்களப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (20) இடம்பெற் நினைவேந்தலில் கலந்து கொண்ட அவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
உங்கள் உறவினர்கள் எல்லோரும் சாறி வாங்கவே, மனைவிக்கு தாலி கொடி காட்டுவதற்காகவே, வெளிநாடு செல்வற்காகவே, வீடு கட்டுவதற்காகவே, போராட்டத்துக்கு செல்லவில்லை இந்த மாவட்ட மாகாண தமிழ் மக்களின் உரிமைக்காக விலை மதிக்க முடியாத உயிரை தியாகம் செய்து இந்த சமூக விடுதலைக்காக போராடியவர்கள்.
அந்த இயக்கங்களுக்குள்ளே பிளவுக்கள் காரணமாக சகோதர படுகொலைகள் காரணமாக பலதரப்பட்ட வீழ்சிகள் இந்த தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டதுடன் பல மாற்றங்கள் நடந்துள்ளது
1987 ம் ஆண்டுக்கு இந்திய இராணுவம் வருவதற்கு முதல் வடக்கு கிழக்கில் இறந்தவர்களின் தொகை 15 ஆயிரத்து 500 பேர். இறுதி யுத்தத்தில் 2009 ம் ஆண்டு உயிரிழந்தவர்கள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர்.
1990-6-19- அன்று சென்னையில் வைத்து வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தினத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யூன் 19 தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்தி வருடாவருடம் நினைவு கூறி வருகிறோம்.
ஈடு இணையற்ற இழப்புக்களுகக்கு மத்தியில் மட்டு மாவட்டத்தில் 800 க்கு மேற்பட்ட தோழர்கள் ஆதரவாளர்கள் உயிரிழந்தனர் அவர்களின் உயர்ந்த தியாகத்துக்காக உன்னதமான நோக்கத்துக்காக எமது மக்களின் சுதந்திரத்துக்காக ஜனநாயக பண்புகளுக்கு மதிப்பளித்து போராடி விலைமதிப்பு இல்லாத உயிர்களை தியாகம் செய்துள்ளனர்
உங்களது ஆன்மா எமது தாயக மண்ணில் இயற்கையோடு உயிர் பெற்றிருப்பதாக நாங்கள் நம்புகிறோம் எத்தனை சதாப்தங்கள் சென்றாலும் கூட உங்களின் தியாகம் சிறந்த வரலாற்று சரித்திரம் இந்த தாய்மண்ணில் வீற்றிருக்கும்.
உயர்ந்து வளர்ந்த விருட்சகங்கள் பசும் புல்தரைகள் நீர் நிறைந்த தடாகங்கள் இது போன்ற இயற்கையின் அழியாத பொக்கிஷங்கள் உங்கள் நினைவுகளை பறைசாற்றி இருக்கின்றன தோழர்களே உங்கள் இலட்சியங்களை சிரம் சாத்தி வணங்குகின்றோம்
இந்த அலுவலகத்தில் தியாகிகள் தினத்தை 1995 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக பல தடைகளுக்கு மத்தியில் நினைவு கூர்ந்து வருகிறோம் கட்சியை பொறுத்தளவில் ஒவ்வொரு தோழர்களும் பல துன்ப துயரங்களை தாங்கி இந்த மக்களின் விடிவுக்காக ஈழ மக்கள் விடுதலை முன்னணி உழைத்த செயல்பாடு ஆகும்.
இந்த சமூகத்தின் விடுதலைக்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்காக தமிழ் தேசியத்துக்காக பொருளாதார கொள்கைக்காக விடாமுயற்சியாக போராட்டத்துக்காக உழைத்த பெருமை இங்குள்ள அனைவரையும் சாரும் அந்த வகையில் நீங்கள் கௌரவப்படுத்தப்படுகின்றீர்கள்.
மட்டக்களப்பு மாவட்டம் மூன்று இனங்கள் சார்ந்த மாவட்டம் இந்த மாவட்டத்தின் செயற்பாடுகளை பொறுத்தவரையில் பல துன்ப துயரங்களுக்கு அப்பால் இந்த போராட்டத்துக்கு விலைமதிக்க முடியாதவர்களை தியாகம் கொடுத்ததற்கு அப்பால் பொருளாதார உதவிகள், உணவுகளையும் இரத்தத்தையும் தானமாக வழங்கினீர்கள், அந்த வகையில் அனைவரும் பெருமை அடைகிறார்கள்.
அப்போது இயக்கத்துக்கு சென்றால் சடலம் வீட்டை நாடி வரும். இப்போது அரசியலுக்கு சென்றால் அரசியல்வாதிகளாக மாறிவிடுவார்கள், இன்று உள்ள சூழ்நிலையில் போராட்டம் தியாக அர்ப்பணிப்பு என்பது பேரம் பேசும் சக்தியாக மாற்றமடைந்துள்ளது. போராட்டமாக பல தரப்பட்ட இயக்கங்கள் உருவாகி இந்த போராட்டம் இறுதி கட்டத்தில் மௌனிக்கப்பட்ட நிலையில் இன்று தமிழர்களுக்கான உரிமைகள் விலை பேசுகின்ற நிலைக்கு மாற்றமடைந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் ஒரு தேசிய கட்சி ஆட்சியமைக்க கூடியவாறு நிலமை மாற்றம் அடைந்துள்ளது வடக்கு கிழக்கை பெறுத்த மட்டில் உரிமை கேட்டு போராடி விலைமதிக்க முடியாத உயிர்களை தியாகம் செய்த சமூகம் இன்று தேசிய கட்சிகளின் அடிவருடிகளாக மாறுகின்ற செயற்பாட்டிற்கு சில கட்சிகள் தங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று உள்ள சூழ்நிலையில் தேசிய கட்சியான ஜே.வி.பி கட்சி பெரும்பான்மையை பெற்றிருந்தாலும் கூட வடக்கு கிழக்கில் இன பிரச்சனை தொடர்பாக ஒரு அங்குலத்தை கூட நகர்த்த முடியாத மிகவும் தெளிவான சிந்தனையில்; செயல்வடிவம் கொண்டிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி தமிழர்களின் உரிமையை பாதுகாக்கின்றோம் என கூறிக் கொண்டு இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட 13 வது திருத்த சட்டத்தில் உள்ள பலதரப்பட்ட விஷயங்களை கூட நடைமுறைப்படுத்து அமுல் படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறது.
2006-6-30 வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் இந்த கட்சி அது மட்டுமல்ல 2004ம் ஆண்டு சுனாமி கட்டமைப்புக்கு அமைக்கப்பட்டடு அதற்கு ஒரு செயலாளரை நியமிக்கும் போது எதிராகவும் தடையாகவும் இருந்த இந்த ஜே.பிபி. கட்சி ஊழலை ஒழிக்க வேண்டும் என சொல்லிக் கொண்டு இன்று வரி அறவிடாமல் இந்த நாட்டில் எதையும் செய்ய முடியாது என வரி அறவிட்டால் மாத்திரமே இந்த நாட்டை பாதுகாக்க முடியும் என பிரச்சாரம் செய்து கொண்டு இப்போது உள்ள ஒரு கிலோ 240 ரூபாவாக இருக்கும் அரிசியை 500 ரூபாவுக்கு மாறும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-கனகராஜா சரவணன்-




