டெங்கு அச்சம் அதிகரிப்பு: கொசு பெருக்க இடங்களை உடனே அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Date:

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுகாதார மேம்பாட்டு பணியகம் (Health Promotion Bureau) நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் வாரத்திற்கு குறைந்தது ஒருமுறை சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து, தேங்கி நிற்கும் நீரை அகற்றுவதன் மூலம் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாதவாறு உறுதி செய்யுமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலர்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் யோகர்ட் கோப்பைகள், காலி பாட்டில்கள் மற்றும் டின்கள் போன்ற இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடியதால் அவற்றை கவனமாக பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, வீட்டிற்குள் உள்ள மலர்தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டியின் நீர்த்தட்டுகள், வாளிகள், நீர் சேமிப்பு பீப்பாய்கள் மற்றும் இலைகளால் அடைபட்ட கூரை நீர்வழிகள் போன்ற இடங்களும் பராமரிக்கப்படாவிட்டால் கொசு இனப்பெருக்க மையங்களாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் மற்றும் பாடசாலைகளும் தங்களது வளாகங்களை தொடர்ந்து பரிசோதித்து, தேங்கி நிற்கும் நீர் காணப்படும் இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 48 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அது டெங்கு நோயின் அறிகுறியாக இருக்கக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்டகால காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும் என்றும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்குவின் கடுமையான சிக்கல்களுக்கு அதிக ஆபத்தில் இருப்பதால் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை: UAE அதிரடி முடிவு

  ஐக்கிய அரபு அமீரக (UAE) அமைச்சரவை, குழந்தைகளின் சமூக ஊடக அணுகலை...

முன்பள்ளிக் கல்வியில் அறிவியல் அடிப்படையிலான புதிய மாற்றம்!

இலங்கையில் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அறிவியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்