பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரது வாகனம், சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் சுருக்குவலைகள் என்பனவற்றுடன் சிக்கியுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் உதவியாளும் வடமராட்சி கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரனுக்கு சொந்தமான வாகனம், அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வடமராட்சி கிழக்கு வெற்றிலை கேணி கடற்படையினரால் கைப்பற்றப் பட்டதுடன் அதில் பயணித்த உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை 3:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பருத்திதுறை பிரதேச சபை உறுப்பினர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினராவார்.
அண்மைக்காலமாக சட்ட விரோத சுருக்கு வலை தொழில் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் கடற்ப்படையினர் கரை ஓரமாக தேடுதல் நடத்தி வந்தனர். குறித்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளரும் ஆவார்.
இதேவேளை கைப்பற்ற பட்ட வாகனம், சுருக்குவலை, கைது செய்யப்பட்ட நபர் ஆகியோர் உரிய சட்ட நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினரால் ஒப்படைக்க படவுள்ளனர்.




