யாழ் மாநகரசபை எடுத்த விபரீத தீர்மானம்!

Date:

நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக குறிப்பிட்டு, புத்தக கண்காட்சிகான அனுமதி வழங்கலை யாழ் மாநகரசபை இடை நிறுத்தியுள்ளது.

முன்தாக யாழ் மாநகரின் கடந்த நிதிக்குழு கூட்டத்தின் போது சபையின் ஆணையாளரால் இறுதி நேரத்தில் முன்வைக்கப்பட்ட குறித்த புத்தகக் கண்காட்சி தொடர்பிலான முன்மொழிவு, யாழின் கலை கலாசார பண்பாடுகளையும் நல்லூர் ஆலயத்தை பிரதிபலிப்பதாக கொண்டதாகவும், எந்தவொரு பின்னணியும் இல்லாது இருக்குமானால் அதை ஏற்கமுடியும் என குறுத்த முழுவின் உறுப்பினர்கள் கூறிய நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த புத்தக கண்காட்சிக்காக சீனா முனைப்புடன் செயற்படுகிறது என அநாமதேயமாக ஒரு செய்தி பரவியது.

இதையடுத்து இன்றையதினம் சபை அமர்வில், மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டி ஆராயப்பட்ட பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என பிரஸ்தாபித்திருந்தார்.

குறிப்பாக அண்டை நாடானா இந்தியாவுடன் நெருங்கிய கலை, கலாசாரம் சார் தொடர்புகளை கொண்டுள்ள யாழ்ப்பாணம் வேறு கலாசாரத் தொடர்புடைய ஒரு புத்தக கண்காட்சியை அனுமதிப்பதில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி குறித்த விடயத்தை ஆராய்ந்த பின்னர் அனுமதி கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.

இன்நிலையில் உறுப்பினர் தர்சானந்த் – யாழ் வர்த்தக கண்காட்சி இந்தியாவின் பின்னணியில் நடைபெறுவதால் அங்கு சீனாவுக்கு இடம் கிடைக்காமையால் யாழில் ஏதாவது ஓரிடத்தில் தானும் புத்தக கண்காட்சியை நடத்த நினைக்கும் சீனா சங்கிகியன் பூங்காவில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் மாநகரசபையால் ஏலத்தில் விடப்படும் ஓர் இடத்தை பெற்று நடத்த முயற்சிக்கின்றது என்ற சாரப்பட கூறியிருந்தார்.

இன்நிலைதில் ஆணையாளர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க நினைப்பதாகவும், கூட்டங்களிலும் சபையின் நடவடிக்கைகளிலும் முதல்வருக்கே அதிகாரம் உள்ளது. இது புதிதாக வந்துள்ள ஆணையாளருக்கு சில வேளைகளில் தெரிதாதிருக்கலாம். எனவே இந்த விதிமுறைக்கு அவரை செயற்படுமாறு அறிவுறுத்துமாறு முதல்வரால் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் குறித்த புத்தக கண்காட்சிக்கான அனுமதி முழுமையாக ஆராய்ந்த இன்னரே வழங்கப்படும் என்றும் அதுவரை எந்த நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படாதெனவும் தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு நாடுகளின் உதவியுடனும், பின்னணியுடனும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், அறவுசார் நிகழ்வான புத்தகக்கண்காட்சியை அரசியல்சாயம் பூசி யாழ் மாநகரசபை இடைநிறுத்த முயல்வது அவர்களின் முதுகெலும்பில்லாத இந்திய அடிமைமனநிலையை வெளிப்படுத்துவதுடன், தமிழ் அரசியலின் மற்றொரு முட்டாள்தனமான அணுகுமுறை என பரவலான விமர்சனம் எழுந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி இளைஞனின் பிணை மனு ஒத்திவைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை பிணையில் விடுவிக்குமாறு...

நாய்களின் வாயை கட்டி வளர்த்தவர் கைது!

நீர்கொழும்பு காவல்துறையினர், கடற்கரை வீதி பகுதியில் உள்ள தனது வீட்டில், தனது...

கணவன், பிள்ளைகளை கழற்றிவிட்டு வந்த பெண், காதலன் மீது நம்பிக்கைத்துரோக வழக்கு!

திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்