மந்திரிமனையின் வரலாற்றை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள்: சீ.வீ.கே அழைப்பு

Date:

யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நல்லூர் மந்திரிமனை திருத்துவது தொடர்பாக எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய சாதகமான கருத்துக்களை முன்வைத்து எவ்வாறு செய்யலாம் என்பதை பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் மந்திரிமனை அழியும் அபாயத்தில் இருந்த நிலையில் அதனை புனரமைப்பு செய்வது தொடர்பாக தற்போது நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் உடன்பாட்டிற்கு வந்திருக்கிறன.

இரு தரப்பு கலந்துரையாடலின் பின்னர் பொது மக்களின் நிதியை பெற்று இதனை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அதற்கான நிதி தொல்லியல் திணைக்களத்திடம் இல்லை.

தொல்லியல் திணைக்களம் அந்த திருத்த பணிகளைச் செய்யும். அதற்கான நிதிகளை நாங்கள் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். அதற்கு ஒரு பொது அமைப்பாக நாங்கள் இணைந்து இதனை செய்ய வேண்டும். சூழல் கனிந்து வந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து நாட்டின் நிபுணர்களை தொடர்பு கொண்டு நல்லூர் மந்திரி மனை இருக்கக்கூடிய இடங்களை ஸ்கான் செயல்பாட்டை செய்தனர். திணைக்களம் அந்த செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

நல்லூர் மந்திரிமனை தொடர்பாக எவ்வாறு செய்யலாம் என்பது சாதகமான கருத்துக்களை முன்வைத்து எவ்வாறு செய்யலாம் என்பதை பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும்.

இதில் எந்த அரசியல் சம்பந்தமும் கிடையாது. இந்த பகுதியில் வசிப்பவன் என்ற அடிப்படையிலும் முன்னாள் மாநகர சபை ஆணையாளர் என்ற அடிப்படையிலும் மாகாண சபை அவைத் தலைவர் என்ற வகையில் இதனை கையாளுகிறேன். இதில் எந்த அரசியல் கலப்பும் கிடையாது.

முக்கியமான யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்