வவுனியாவில் மாணவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் வைத்தியசாலையில்!

Date:

வவுனியா இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மோதல் நடந்ததாகவும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

பாடசாலை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கும் இடையில் கடந்த மார்ச் மாதம் மடுகந்த பிரதேசத்தில் முதலாவது மோதல் இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் மட்டை தொடர்பான பிரச்சினையே முதல் மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின், கடந்த 31ம் திகதி இரட்டைபெரியகுளம் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே ஏற்பட்ட மோதலில், தாக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஏழு மாணவர்கள் ஈடுபட்டதாகவும் அவர்களில் நால்வர் நேற்று (03ஆம் திகதி) இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்