பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

Date:

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் வழமைபோன்று எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக உத்தியோகபூர்வமாக உணர்வுவெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந் நினைவேந்தலை ஏற்பாடு செய்துவரும் நிலையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிசாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைய பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை வளாகத்தில் வளாகத்தில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உணர்வாளர்கள், உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவரும் நிலையில் புலனாய்வாளர்கள் ஏற்கனவே புகைப்படம் மற்றும் வீடியோ பிடிப்பதில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் நினைவேந்தல்களுக்கு தடையில்லை என அரசாங்கம் சொல்லளவில் தெரிவித்து வருகின்றபோதும் செயலளவில் நனைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்காத போக்கே காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்