‘மெர்சல்’ ரிலீஸுக்காக பழனிசாமி இல்லத்துக்கு ஊர்ந்து வந்தவர் விஜய்: தவெகவுக்கு அதிமுக பதிலடி

Date:

‘2018 மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. மெர்சல், மாஸ்டர் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?’ என அதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. அவ்வளவு தில் இருந்தால், ‘மெர்சல்’, ‘மாஸ்டர்’ படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தவெக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?

தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?

எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதாவின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?

மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?

கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?

பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்’ எனத் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்