Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

Date:

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தகராறில், இலங்கை இளம்​பெண் கார் ஏற்றி கொலை செய்​யப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

சென்னை கோயம்​பேட்​டில் பிரபல நட்​சத்​திர ஓட்​டல் ஒன்று உள்​ளது. அதன் உள்​புறம் உள்ள மது பாரில் நேற்று முன்​தினம்​இரவு 11 மணி​யள​வில் இரு தரப்​பினர் மது அருந்​தினர். அப்​போது, அவர்​களுக்​குள் நடன​மாடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது ஒரு​வர் சரமாரி​யாக தாக்​கிக் கொண்​டனர்.

அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பினரை​யும் உடனடி​யாக வெளி​யேற்​றினர். ஆனால் வெளி​யில் வந்​தும் இருதரப்​பினரும் மோதலில் ஈடு​பட்​டனர். அவர்​களைப் பவுன்​சர்​கள் மீண்​டும் விலக்கி எச்​சரித்து அனுப்​பினர். இந்த மோதலால் நள்​ளிர​வில் மது​பார் மூடப்​பட்​டது. மோதலில் ஈடு​பட்​ட​வர்​களில் ஒரு தரப்​பினர் 3 பைக்​கு​களில் அங்​கிருந்து அடுத்​தடுத்து புறப்​பட்​டனர். மற்​றொரு தரப்​பைச் சேர்ந்​தவர்​கள் தாங்​கள் வந்த சொகுசு காரில் கிளம்​பினர்.

கோயம்​பேடு பாலத்​துக்கு கீழே (கோ​யம்​பேடு – திரு​மங்​கலம் செல்​லும் வழி) சென்று கொண்​டிருந்த போது ஏற்​கெனவே தகராறில் ஈடு​பட்டு முன்​னால் பைக்​கில் சென்​றவர்​களில் ஒரு தரப்​பினர் கற்​களை வீசி தாக்​குதலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது காரில் வந்​தவர்​களுக்கு ஆத்​திரத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

இதையடுத்​து, சொகுசு காரை அதிவேக​மாக ஓட்டி எதிர்​தரப்​பினர் மீது மோதினர். இதில், இரு சக்கர வாக​னத்தை ஓட்​டிச் சென்ற 18 வயது இளம்​பெண் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பின்​னால், அமர்ந்​திருந்த 17 வயது சிறுமிக்​கும் பலத்த காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, கொலை​யாளி​கள் அங்​கிருந்து மின்​னல் வேகத்​தில் தப்​பினர்.

நள்​ளிர​வில் நடை​பெற்ற இந்த சம்​பவம் அந்த பகு​தி​யில் பெரும் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யது. தகவல் அறிந்து கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று உயி​ரிழந்த பெண்​ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காகக் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். காயம் அடைந்த சிறுமியை​யும் அதே மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். தடய​வியல் நிபுணர்​கள் சம்பவ இடத்​தில் தடயங்​களைச் சேகரித்​தனர்.

போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், உயி​ரிழந்த பெண் யான்சி (18) என்​பதும், விழுப்​புரம் மாவட்​டம் அனிச்​சம் குப்​பத்​தில் (இலங்கைத் தமிழர்​மறு​வாழ்வு முகாம்) வசித்​ததும், கடந்த 19-ம்​தே​தி, திரு​வள்​ளூர் மாவட்​டம் கொண்​டஞ்​சேரியைச் சேர்ந்த தோழி தம்​பிதா என்​பவர் மூலம் அறி​முக​மான, சென்னை ராமாபுரத்​தில் வசிக்​கும் மற்​றொரு தோழி​யான பவுசி தீபி​காவை (17) பார்க்க வந்​ததும் தெரிந்​தது.

பின்​னர், கடந்த 10 நாட்​களாக அவரது வீட்​டிலேயே யான்சி தங்​கி​யுள்​ளார். இந்​நிலை​யில்​ தான் 28-ம் தேதி மாலை சினி​மாவுக்கு செல்​வ​தாகக் கூறி வெளியே சென்று மறு​நாள் காலைவீட்​டுக்கு வந்​தவர்​களைச் சிறுமி​யின் தாய் கண்​டித்​துள்​ளார். இதனால், கோபித்​துக் கொண்டு இரு​வரும் வீட்டை விட்டு வெளி​யேறி உள்​ளனர்.

பின்​னர், தங்​களது இன்​ஸ்​டாகி​ராம் நண்​பர்​கள் உள்பட 6 பேர் சம்​பவத்​தன்று மது​பாருக்கு சென்​றுள்​ளனர். அப்​போது ஏற்​பட்ட தகராறில் யான்சி கார் ஏற்​றிக் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். யான்சி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்டு பிரச்​சினை​யால் அவரது குடும்​பத்​தினர்​ தமிழகத்​தில்​ தஞ்​சம்​ அடைந்​த​தாக​வும்​ போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

4 பேரிடம் விசாரணை: சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தினர். யான்​சி​யை கார் ஏற்றி கொலை செய்​தது தொடர்​பாக அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த பால​குரு (21), சூளைமேட்​டைச் சேர்ந்த கல்​லூரி​ மாணவர் ஜோஷ்வா (19), பி.இ. மாணவர் நெற்​குன்​றம் கிஷோர்​கு​மார் (19) ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

விரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்தபி.டெக். மாணவர் சுமந்த் சக்​திவேல் (21), ரா​மாபுரத்​தைச் சேர்ந்த பி.​காம். மாணவர் மோகன சுந்​தரம் (19), அண்ணா நகரைச் சேர்ந்த டிப்ளமோ மாணவர் ராகுல் (20), சூளைமேட்​டைச் சேர்ந்த விமல் (19) ஆகிய மேலும் 4 பேரிடம் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவர்​கள் தி​முக ஆதர​வாள​ரான சுமன் சக்​திவேல் என்​பவருக்கு சொந்​த​மான தி​முக கொடி கட்​டிய காரில் மது​பாருக்கு சென்​றதும் தெரியவந்தது.

தாய் கதறல்: யான்சி கொலை செய்​யப்​பட்ட தகவல் அறிந்த தாய் மேரி ஸ்டெல்லா கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் கண்​ணீருடன் கூறும்​போது, ‘‘ என் மகள் கொலைக்கு நீதி வேண்​டும். என் பிள்​ளை​யைக் கொலை செய்​தவனை முதல்​வர் விஜய் தூக்கிலிட வேண்​டும். இல்லை என்​றால் துப்​பாக்கி கொடுங்​கள். கொலை​யாளியை நானே கொன்​று​விட்டு சிறைக்​குச் செல்​கிறேன்​’’ என்​று கூறி​னார்​.

spot_imgspot_img

More like this
Related

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...

சுரேஸ் சாலேவுக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது...

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்