சமையலறைக்குள் தீப்பற்றிய எரிவாயு சிலிண்டர்

Date:

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீ ஒன்றில் எரிவாயு சிலிண்டர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 10.00 மணிக்கு தீப்பற்றியதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஈரமான சாக்கு போட்டு தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் மட்டு மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் சில நிமிடங்களில் சென்றதையடுத்து பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

குறித்த வீட்டில் சம்பவ தினமான நேற்று இரவு வீட்டின் உரிமையாளர் எரிவாயுவை பயன்படுத்தி உணவு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார் இதன் போது சிலிண்டரில் இருந்து வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீப்பற்றி கொண்டது.

இதனையடுத்து உடனடியாக புத்திசாதுரியமாக வீட்டின் உரிமையாளர் செயற்பட்டு ஈரமான சாக்கு போட்டு தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் எரிவாயு சிலிண்டரை சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தி வீட்டின் வெளியில் கொண்டு சென்று வைத்தனர்.

அயலவர்கள் மாநகரசபை தீயணைக்கும் பிரிவுக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு சில நிமிடங்களில் சென்றனர்

இதேவேளை தற்போது அதிகளவான வெப்பம் ஏற்பட்டுள்ளதால் வீடுகளில் மற்றும் கட்டிடங்களில் உள்ள மின்சார வயர்கள் அதிக வெப்பத்தால் உருகி மின் ஓழுக்கு ஏற்படுகின்ற வேளை தானாக இயங்கி மின்சாரத்தை துண்டிக்கும் றிப் சுவிட்சுகள் செயல்படாததால் தீ ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் வீடுகளில் உள்ள றிப் சுவிட்சுகள் செயற்படுகின்றதா என பரிசோதனைகளை செய்யவும் என மாவட்ட மின்சார சபை பணிப்பாளர் பொறியலாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்