ரிக்ரொக் பார்க்க கைத்தொலைபேசி தர மறுத்த 11 வயது தங்கையை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய 14 வயது அண்ணா: மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்!

Date:

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை இன்று சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (28) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதுடன் தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியில் சென்றுள்ள நிலையில் 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தருமாறும், ரிக்ரொக் பார்க்க வேண்டும் என்றும் சகோதரன் கேட்டுக் கொண்டார். அதற்கு சகோதரி கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் சகோதரியை அவரின் கழுத்தை நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்

இதனை தொடர்ந்து சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாது போல வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதே நேரம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடிய போது குளியலறை தண்ணீர் தொட்டியில் 11 வயது மக்கள் வீழ்ந்து மயங்கி கிடப்பதை அவரை மீட்டு கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் மேற்கொண்ட சிறுவன் சகோதரியை கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனை தொடர்ந்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...

நாட்டின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்பு

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, நாடு முழுவதும் சுமார்...

அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்