துப்பாக்கி மீட்பு

Date:

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை, கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் வெள்ளிக்கிழமை (24) அன்று மீட்டனர்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் எவரும் இன்றி ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக அந்த ஆயுதம் வெலிகந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரி-56 ரக துப்பாக்கி ஒரு கருப்பு பொலித்தீன் பையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வெலிகந்த பொலிஸ் கூறுகிறது.

விசாரணைகளை நடத்தி வரும் வெலிகந்த பொலிஸ், ரி-56 ரக துப்பாக்கியின் வரிசை எண் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

ஜனவரி 12 அன்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு இது சொந்தமானது என வெலிகந்த பொலிஸ் சந்தேகிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்