இன்றும் பல பகுதிகளில் மழை

Date:

இன்றைய தினத்தின் புதிய தரவு பகுப்பாய்வுகளின்படி, இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் நடத்தை, வளர்ச்சி மற்றும் நகரும் பாதை குறித்து திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அனுராதபுர மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சுன்னாகம்- புத்தூர் வீதி மூடல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17)...

ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டதால்,...

தைவானின் சுதந்திர நகர்வுக்கு எதிராக ட்ரம்ப் எச்சரிக்கை

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தையின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்