ரவிமோகனுடன் பிரேக்-அப்? – சென்னையை விட்டு வெளியேறுவதாக கெனிஷா பதிவு

Date:

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி – கெனிஷா தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது அதுகுறித்த நீண்ட விளக்கத்தை பாடகி கெனிஷா வெளியிட்டுள்ளார்.

2024-ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்தார். அவருக்கும் கெனிஷாவுக்கும் இடையே காதல் இருப்பதாகப் பேசப்பட்டது. இருவரும் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்தனர்.

சமீபத்தில் தரம்சாலாவில் நடைபெற்ற ஒரு கோயில் விழாவில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டது பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து ஆர்த்தியின் ஆதரவாளர்களிடமிருந்து கெனிஷாவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கெனிஷா இன்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு மனிதரைக் காப்பாற்ற என்னையே நான் தியாகம் செய்தேன். ஆனால், இந்த உலகம் உண்மைக்கும் மென்மைக்கும் இடம் தராத ஒன்றாக இருக்கிறது. பொய் சொல்பவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களுக்கே இங்கு இடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “திரைத்துறையினருக்கும், அவரை நேசிப்பவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அவர் இனி உங்கள் சொத்து. இனி எந்த விளக்கமும் இல்லை, அவருக்காகப் போரிடப் போவதும் இல்லை. அவரை முழுமையான விடுதலையுடன் வழியனுப்புகிறேன்” என்று ரவி மோகனுடனான பிரேக்-அப்பை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

இணையவழித் தாக்குதல்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தனது இசைப் பயணத்தில் இருந்தும் தெரபி பணியில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகவும், சென்னையை விட்டு வெளியேறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். “பெண்ணியம் வென்றது, மகிழ்ச்சி தோற்றது” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரவி மோகன் தரப்பிலிருந்து இதுவரை இந்தப் பிரிவு குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்