யாழில் இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்: துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

Date:

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது, அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார்.

இன்று (8) காலை இந்த சம்பவம் நடந்தது.

இளைஞன் ஒருவரை 3 பேர் கொண்ட குழுவொன்று சுற்றிவளைத்து கடுமையாக தாக்கியுள்ளது. தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

பண்டத்தரிப்பு நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தை, ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

கடமை முடித்து சிவில் உடையில் சென்று கொண்டிருந்த இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரான மதுராஜ், இந்த மோதல் சம்பவத்தை அவதானித்து, விரைவாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியுள்ளார்.

பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டிச் சென்று, ஒருவனை மடக்கிப் பிடித்துள்ளார்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் இளைவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தாக்கப்பட்ட இளைஞன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை...

சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய தவெக ஆதரவு பெண்கள்: இருவர் கைது

தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக பதவியேற்பு நடத்த வலியுறுத்தி, திண்டுக்கல்லில் பெண்கள்...

மட்டு வாவியில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

மட்டக்களப்பு வாவியில் உயிரிழந்த நிலையில் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்