11 வயது மகளுக்கு சூடு வைத்த தாய் கைது!

Date:

செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுமிக்கு இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த சிறுமியின் தாயாரை நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலை அனுமதித்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செங்கலடி கணேசபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று இரவு பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து பொலிசார் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு 11 வயது சிறுமி மீது தாயார் இரும்பு கரண்டியை நெருப்பில் சூடாக்கி அதனை குழந்தையின் கையில் வைத்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து சிறுமியின் தாயாரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட தாயாரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்​கத்​தா​வின் பிரி​கேட்...

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்