மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

Date:

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் கம்பனி ஒன்றின் முகாமையாளர் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (24) ம் திகதி அதன் முகாமையாளர் கணக்காளரை அணுகி இன்று ஈடு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் கணவனுடன் தகராறு எனவே அந்த தங்க ஆபரணங்களை பார்ப்பதற்கு வருவர் என கூறி அதனை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்து தனது மேசையில் வைத்து கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து கம்பனியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து வங்கிக்கு பணம் இதுவரை வைப்பில் இடப்படவில்லை அதனை வைப்பில் இடுமாறு கோரியபோது அந்த 17 இலட்டசம் ரூபா பணத்தை தான் வைப்பில் இடுவதாக கணக்காளரிடம் இருந்து பணத்தை முகாமையாளர் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் முகாமையாளர் தங்க ஆபரணங்களை வாடிக்கையாளரிடம் காட்டி விட்டு வருகிறேன் என தங்க ஆபரணங்களையும் பணத்தையும் எடுத்து கொண்டு பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு கம்பனியில் இருந்து வெளியேறிள்ளார். மாலை ஆகியும் அவர் கம்பனிக்கு திரும்பி வராததையடுத்து அவருடைய கையடக்க தொலைபேசிக்கு தொடர்பு ஏற்படுத்திய போதும் அது நிறுத்தப்பட்டிருந்தது. தங்க ஆபரணம் மற்றும் பணத்துடன் போனவர் போனவர் தான் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த திருட்டு தொடர்பாக கம்பனியின் கணக்காளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற குறித்த முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்