ரிக்ரொக் காதலனுடன் மாயமான 15 வயது யாழ் சிறுமி: விசாரணையில் சிக்கிய மற்றொரு மன்மதராசா!

Date:

ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரிக்ரொக் மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருடன், 15 வயதான சிறுமி ஓட்டம் பிடித்துள்ளார்.

நெல்லியடி பொலிசாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிசார் கைது செய்தனர்.

சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவருடன் முறையற்ற விதமாக நடக்கவில்லையென காதலன் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கிய போது, அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, தனது பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான முன்னாள் காதலனால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து முன்னாள் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான முன்னாள், இன்னாள் காதலர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்