தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

Date:

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன் பெற்றவர்களுக்கு வாக்களிக்க 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் மாலை 6 மணி நிலவரப்படி 83.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 89.20% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 74.46% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

வரலாறு படைத்த தமிழகம்: தமிழகத்தில் இதுவரை பதிவானதில் அதிக வாக்கு சதவீதம் என்றால் 2011-ல் 77.8 % வாக்குகள் பதிவானதுதான். அதற்கு முன்னதாக 1967-ல் 76.57% வாக்குகள் பதிவானதே அதிகபட்ச வாக்குப் பதிவு சாதனையாக இருந்தது. 1957 முதல் இதுவரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதங்களின் விவரம்:

1957-ல் 47% வாக்குகள்

1962-ல் 71% வாக்குகள்

1967-ல் 76.57% வாக்குகள்

1971-ல் 71% வாக்குகள்

1977- ல் 61.58% வாக்குகள்

1980-ல் 61.58% வாக்குகள்

1984-ல் 73.47% வாக்குகள்

1989-ல் 69.69% வாக்குகள்

1991-ல் 63.92% வாக்குகள்

1996-ல் 66.95% வாக்குகள்

2001-ல் 59.07% வாக்குகள்

2006-ல் 70.22% வாக்குகள்

2011-ல் 77.8% வாக்குகள்

2016-ல் 74.26% வாக்குகள்

2021-ல் 71.28% வாக்குகள்

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்