யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை, வைத்தியர் ஒருவர் இழுத்து விழுத்தியதாக சமூக ஊடகங்களில் ஒரு சிசிரிவி காட்சி பகிரப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் சுமார் ஒரு வருடத்தின் முன்னர் நடந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடமாக இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கையெடுக்கவில்லையென்றும், இது அவரது நிர்வாக குறைபாட்டை குறிப்பிடுகிறது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஒரு வருடத்தின் பின்னர் இந்த காட்சிகள் பகிரப்பட்டதன் பின்னணியில் சந்தேகம் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு ஊழியரை இழுத்து விழுத்திய வைத்தியர் தரப்பு, பணிப்பாளருக்கும் தற்போது குடைச்சல் கொடுப்பதன் பின்னணியில் இந்த சிசிரிவி வெளியீட்டை இணைத்தும் நோக்க வேண்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஏனெனில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சிசிரிவி காட்சிகளை சாதாரண பாதுகாப்பு ஊழியர்கள் பெற வாய்ப்பில்லையென்பதால், உயர்மட்டத்தில் உள்ள ஒருவரே சிசிரிவி வெளியீட்டின் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், முறையான விசாரணையின் பின்னர சிசிரிவி காட்சியை யார் வெளியிட்டார்கள் என்பது தெரிய வரும். எனினும், உயர்மட்டத்தினரினால் மட்டும அதை அணுக முடியும்.
குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலைக்குள் ஹோர்ன் அடித்த காரணத்தால், வைத்தியர் அவருடன் முரண்பட்டு, மோட்டார் சைக்கிளை இழுத்து விழுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிய போதும், பணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.



