கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து இயக்கும் இந்தி படத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சல்மான் கான் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக இணைந்துள்ளார். இதை படக்குழு அறிவித்துள்ளது. ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்ற நயன்தாரா, இப்போது சல்மான் கான் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.



