ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனியின் முதல் செய்தி சில நிமிடங்களில் வெளியிடப்படும் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.
இந்த செய்தி “புரட்சியின் தியாகி தலைவர் (அலி கமேனி), மக்களின் பங்கு மற்றும் கடமைகள், ஆயுதப்படைகள், நிர்வாக அமைப்புகள், எதிர்ப்பு முன்னணி, அத்துடன் பிராந்தியத்தின் நாடுகள் மற்றும் எதிரிகளை கையாள்வது” ஆகியவற்றைக் குறிக்கும் என்று அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சனல் தெரிவித்துள்ளது.
மூத்த ஷியா மதகுருமார்களின் குழுவான நிபுணர்களின் சபை, இந்த வார தொடக்கத்தில் அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு அவரை புதிய உச்ச தலைவராக அறிவித்தது.
மொஜ்தபா இன்னும் பொதுவில் காணப்படவில்லை, மேலும் ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு வான்வழிப் போரில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.




