தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-இருவர் கைது

Date:

நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று வந்ததாக கூறப்படும் இத்திருட்டு தொடர்பில் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை அண்மையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி இருந்தார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை(28) அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸாரை மேலதிக விசாரணைக்கு அழைத்திருந்தனர்.அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி உட்பட மற்றுமொரு சந்தேக நபரையும் நிந்தவூர் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்ப்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஒரு சந்தேக நபர் வாயு துப்பாக்கி ஒன்றினை வைத்துக் கொண்டு குறித்த தனியார் அனல் மின் நிலையத்தில் உள்ள புறாக்களை வேட்டையாட வந்திருந்ததாக கூறி இருந்தமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிவந்துள்ளது.

அத்துடன் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட வாயு துப்பாக்கி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்