வடக்கு, கிழக்கில் நாளை மழை

Date:

நாளைய தினம் (22) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்