‘தனுஷ் சார் ஒரு கலைக்கூடம்’ – மிருணாள் தாகூர் புகழாரம்

Date:

தனுஷ் சார் ஒரு கலைக்கூடம் என்று மிருணாள் தாகூர் அளித்த பேட்டியில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்யவுள்ளனர் என்று இணையத்தில் கடந்த சில மாதங்களாகே வதந்திகள் பரவி வந்தன. இதற்கு மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

தற்போது இந்திப் படமொன்றின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் மிருணாள் தாகூர். அவரிடம் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிருணாள் தாகூர், “’தேரே இஸ்க் மெயின்’ இந்திப் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் சார் இருக்கும் போது, அவரை ‘சன் ஆஃப் சர்தார் 2’ ப்ரீமியர் காட்சிக்கு வருமாறு கேட்டேன். அவர் வருவார் என்று நினைக்கவில்லை. ஆனால், அவர் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

தனுஷ் சாரின் ‘மாரி’, ’ராயன்’, ‘ராஞ்சனா’, ’கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களை பார்த்த பின்பு அவருடைய ரசிகையாகவே மாறிவிட்டேன். அவரது ‘அசுரன்’ படத்தை பலமுறை பார்த்துள்ளேன். தனுஷ் சார் ஒரு கலைக்கூடம் போன்றவர். ஒரு நடிகராக அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்