மட்டக்களப்பு சிறைச்சாலை கைதியிடமிருந்து போதைப்பொருள் மீட்பு

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சக கைதியை ஊசியால் குத்தி தண்டனைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறைக்கைதியிடம் இருந்து நேற்று புதன்கிழமை (07) இரவு மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் 128 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்டதையடுத்து அவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்து நீதிமன்ற த்தின் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு சிறை தண்டனை வழங்கிய நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது சக கைதி ஒருவருக்கு ஊசியால் குத்திய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

இதனையடுத்து குறித்த கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டதை அடுத்து அவரை அங்கிருந்து சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றப்பட்டு மட்டக்களப்புக்கு சம்பவ தினமான நேற்று இரவு கொண்டுவரப்பட்டுள்ளார்

இவ்வாறு கொண்டுவரப்பட்டவரை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்வதற்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது அவரின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 128 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை கண்டுபிடித்து மீட்டனர்

இதனை தொடர்ந்து குறித்த நபரை பொலிசார் கைது செய்து சிறையில் தடுத்து வைத்தனர். அதை தொடர்ந்து குறித்த நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் என பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபர் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் கூடத்தில் தடுத்து வைத்திருந்த போது அவரை உறவினர்கள் பார்க்க சென்ற போது அவருக்கு போதை பொருளை வழங்கியிருக்கலாம் அல்லது எந்த வழியில் அவருக்கு கிடைத்திருக்கும் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்