முல்லைத்தீவு சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

Date:

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் இன்று (24) இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை சுமந்து சென்று சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்