வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலை நேற்று (26) வெள்ளத்தில் மூழ்கியது.
தற்போது பெய்துவரும் அடைமழையால் நேற்று இரவு நெடுங்கேணி வைத்தியசாலைக்குள் நீர் புகுந்தது. இதனால் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
தற்போது வெள்ளநீர் வடிந்து, நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக தமிழ்பக்கத்தின் வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.




