ஓய்வுபெற்ற இராணுவ குழு ஆர்ப்பாட்டம்

Date:

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் பாராளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்