உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்றதே திருமலை புத்தர் சிலை விவகாரம்

Date:

கடந்த காலத்தில் புத்தர் சிலையை வைக்கும் போது திருகோணமலையின் நகர சபை ஆட்சி செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததா? இல்லை இப்போது ஆட்சி செய்வது அதே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்தா? இல்லை எனவே இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு திட்டமிட்டு செய்தார்களே அவ்வாறு மாற்று கட்சிகள் திட்டமிட்டு இன துவேசத்தை ஏற்படுத்த போட்ட திட்டம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான யோன்சன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 5 வது அமர்வு இன்று வியாழக்கிழமை (20) காலை 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் மாநகர சபை முதல் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற போது அவர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இன துவேசத்தை தூண்டுகின்றனர் அது தான் உண்மை இது மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அரச காணியை புத்த மகாசபைக்கு கொடுத்தனர் அன்று தொடக்கம் புத்தர் சிலை இருந்தது இன்று நேற்று அல்ல அப்போது திருகோணமலையின் நகரசபையை ஆட்சி செய்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் தமிழரசு கட்சி தான் ஆட்சி செய்கிறது

அன்று மஹிந்த ராஜபக்ஷ அரச காணியை வழங்கிய புத்தர் சிலை வைக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? இப்போதும் நகராட்சி சபையை ஆட்சி செய்வது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தா இல்லை?

அதாவது திட்டமிட்டு எப்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்தார்களே இவ்வாறு திட்டமிட்டு நாங்கள் கொண்டு போய் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைப்போம் பின்னர் அதை எடுத்து கொண்டு வாங்க அதனை தமிழர்கள் கொண்டு சென்று விட்டார்கள் என ஒரு இனத் துவேசத்தை ஏற்படுத்த மாற்று கட்சிகள் போட்ட திட்டம் தான் இது என்பது அடிப்படையான உண்மை
;

தேசிய மக்கள் சக்தி இதை உணர்ந்து ஒரு மாற்றத்தை எடுத்து அதை திரும்பவும் அங்கு வைத்தோம் எனவே இதை நன்றாக சிந்திக்கவும் இனவாதம் இல்லாத ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தி

76 வருடங்களாக பண்டாரநாயக்கா டட்லி சேனாநாயக்க இன துவேசத்தை பேசி வந்த இவர்கள் மாறி மாறி இந்த இன துவேசத்தை செய்தனர் இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நாங்கள் ஒற்றுமையாக பயணத்தை மேற்கொள்வோம் என்றார்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்