கள்ளுத்தவறணையில் பொழுதுபோக்காக அடித்துக்கொலை: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

Date:

யாழ்ப்பாணத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர், காரணமின்றி குறித்த குடும்பஸ்தரை தாறுமாறாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்