ஓட்டமாவடி பிரதேசசபை ஐ.ம.ச வசம்

Date:

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A.L.M அஸ்மி தலைமையில் இன்று (20). நடைபெற்றது.

முன்னதாகத் தவிசாளராகப் பதவி புரிந்த முகமட் கனீபா முகமட் பைருஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சி மாறி தவிசாளர் பதவியை பெற்று இருந்த நிலையில் கட்சியின் தீர்மானத்தை மீறியதின் காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்தின் காரணமாக தனது தவிசாளர் பதவியை அண்மையில் இழந்து இருந்தார். அதன் வெற்றிடத்தை நிரப்புவதற்கே, புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

19 உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் அமர்வில், 11 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டு, புதிய தவிசாளரைத் தெரிவுசெய்தனர்.

ஐக்கி மக்கள் சக்தி 8 உறுப்பினர்களும் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய கட்சிகளின் தலா ஒவ்வோர் உறுப்பினர்களும் கலந்துகொண்டு புதிய தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் , சபைக்கு சமூகமளிக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

-மு.கோகிலதாசன்-

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்