அந்தோனியார் ஆலயத்தில் முன்னாள் கல்விப்பணிப்பாளரின் சடலம்!

Date:

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராக வும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை(10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.

சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார்.
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்