யானை தாக்கி ஒருவர் பலி

Date:

மட்டக்களப்பு கரடியனாறு கார்மலை பகுதியில் மாடுகள் மேய்க்க சென்ற 55 வயதுடைய பண்ணையார் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சோமசுந்தரம் வெள்ளை தம்பி என்ற பண்ணையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த பண்ணையார் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பகுதிக்கு சம்பவ தினமான இன்று காலை 11.00 மணியளவில் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்