நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவிகளை இழந்தனர்

Date:

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் 10 மாதம் 24ம் திகதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரான எம்.எச்.எம்.பைரூஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி பிரதேச சபையின்) உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் ரேகன் 2025.10.31 அன்று பிரகடனப்படுத்தியுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்திலும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் 10 மாதம் 24ம் தேதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த எம்.எச்.எம்.பைரூஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கைக்கு முரணாக செயற்பட்டமையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்