யாழ் பல்கலைக்கழக நூலக மேற்கூரையில் துப்பாக்கி

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற் கூரை பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரை பகுதியில் திருத்த வேலை நடைபெற்ற போதே நேற்று வியாழக்கிழமை இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு குறித்த பொருட்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் இன்று காலை அகற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கூரை பகுதியில் திருத்த வேலை இடம்பெற்ற நிலையில் அதன் அருகில் ரி 56 ரக துப்பாக்கி, இரண்டு மகஸின், வயர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் சிலவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து மீண்டும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அச்சினி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை...

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்