காரணமின்றி கைது: 6 பொலிசாரை குற்றவாளிகளாக அறிவித்த உயர்நீதிமன்றம்!

Date:

கொட்டாவை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.பீ. சமரசிங்க மற்றும் ஆறு பொலிஸ் உத்தியோகத்ர்கள், தனியார் பேருந்து உரிமையாளரை எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், தங்கள் சொந்தப் பணத்திலிருந்து 1 மில்லியன் ரூபாயை மனுதாரருக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொட்டாவை, பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர, நீதிபதிகள் யசந்த கோடகொடவ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரின் ஒப்புதலுடன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2021 ஜூலை 9 ஆம் திகதி இரவு, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, மண்டியிட வைக்கப்பட்டு, தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர, முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் ஆராய்ந்ததில், பிரதிவாதிகள் (பொலிஸ் உத்தியோகத்தர்கள்) காவலில் இருந்தபோது மனுதாரரை கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்