போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் ஊடக செயலாளர் சுரங்க லக்மல் செனவிரத்ன, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாததால் பதவி விலகியுள்ளார்.
அவரைத் தவிர, நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்த பல அதிகாரிகள் சமீபத்திய காலங்களில் ராஜினாமா செய்துள்ளனர்.
சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில், அமைச்சர் பிமல் தனது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இலாகாவிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




