ஏற்க மறுத்த நீதிமன்றம்

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீதவான் நீதிமன்றக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தகவல் கோரி விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்பியுள்ளார். குறித்த தகவல் அறியும் கோரிக்கை விண்ணப்பத்தில்-

கிளிநொச்சி மாவட்டத்தில் . 2024 மற்றும் 2025 முதல் அரையாண்டு வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் எத்தனை வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன? இந்த வழக்குகளில் எத்தனை ரிப்பர் மணல் மற்றும் எத்தனை உழவு இயந்திர மணல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டன? இந்த மணல்கள் எவ்வளவு தொகைக்கு ஏல விற்பனை செய்யப்பட்டன? அந்த பணம் என்ன
செய்யப்பட்டது? பகிரங்க ஏல விற்பனையின் போது மணல்களை பெற்றுக்கொண்டவர்கள் யார்? அவர்களது விபரங்கள்? போன்ற தகவல்கள் கோரப்பட்டு 02.10.2025 ஆம் திகதியில் விண்ணப்பிக்கப்பட்டன.

ஆனால் தங்களுடை நீதிமன்றில் குறிப்பிட்ட பதவி நிலை ஆதாவது தகவல் அறியும் அலுவலர் இல்லை என தெரிவித்து பதிவாளர் தகவல் அறியும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வில்லை என தபால் உறையில் குறிப்பிட்டு தபால் ஊழியர் கோரிக்கை அடங்கிய தபாலினை மீளவும் கோரிக்கையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்