“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” – கரூர் நெரிசல் சம்பவத்துக்கு விஜய் இரங்கல்

Date:

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்