கனகராயன்குள விபத்தில் ஜேர்மன் பிரஜை பலி

Date:

கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (19.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்