உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் துப்பாக்கிகள்

Date:

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 17ஆம் திகதி ரோந்து பணியில் இருந்த பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சட்டத்தரணி உயிரிழந்த வீட்டை சோதனை செய்தபோது பல துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில், போர் 12 ரக துப்பாக்கி ஒன்று, ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று, போர் 12 ரக துப்பாக்கிகளின் 6 அசல் பாகங்கள், 11 குழாய்கள், 2 சிறிய துப்பாக்கிகள், போர் 12 மற்றும் 16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 440 புதிய தோட்டாக்கள் உட்பட பல துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் அடங்கியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிகள் சில குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா என்பதையும், இவற்றுடன் மேலதிக துப்பாக்கிகள் சில குழுக்களுக்கு வழங்கப்பட்டதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடைபெறுவதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன சுமனசிறி கூறினார்.

இத்துப்பாக்கிகளில் பல இலங்கையில் தயாரிக்கப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுவதால், அவை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பசுமை எதிர்காலத்தை நோக்கி கல்முனை சாஹிரா மாணவர்களால் உருவாக்கப்பட்ட Bio gas Unit வெற்றிகரமாக திறந்து வைப்பு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மாணவர்களின்...

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்