கிளிநொச்சியில் நடந்த பயங்கரம்: பேருந்தை இடித்த டிப்பர்; கசிப்பு போத்தலுடன் சென்று மோதிய இளைஞர்கள் பலி!

Date:

கிளிநொச்சி ஏ9 வீதியில் கரடிபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேரூந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக உள்ள தரிப்பிடத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதே வேளை ரிப்பருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து ரிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடதிலேயே பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடம் கசிப்பு காணப்பட்டதாக தெரிவித்த பொலீஸார், காயமடைந்து காணப்பட்டவரை அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவி்த்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கூடியிருந்த பொது மக்கள் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோடு. புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றபின்னரே நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்க அனுப்பி வைத்ததோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்