மறந்து போயும் தமிழர்கள் யாராவது ஒருவராவது எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களித்து அவர் மதலமைச்சரானால் அன்றுதான் எனது அரசியலில் கடைசி நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.
இன்று (4) குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அர்ச்சுனா இராமநாதன் தனது பேஸ்புக் நேரலையில் தமிழீழம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
சிலோன் என அழைக்கப்படுவதற்கு முன்னர் ஈழம் என்ற வார்த்தையே பயன்பாட்டில் இருந்ததாகவும், தமிழ் மன்னர்கள் இலங்கை முழுவதையும் ஆண்டதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார்.
தமிழ் மன்னர்கள் வடக்கு கிழக்கை ஆண்டார்கள் என்பதை மறைக்க தேசிய மக்கள் சக்தி அரசு முயற்சிப்பதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார்.



